கர்ப்ப காலத்தில் உடலை எவ்வாறு பராமரிப்பது?

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

வாழ்க்கை முறையிலும் கருவின் வளர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

கருவுற்றது உறுதியானதிலிருந்து பிரசவ காலம் முழுக்க மிகவும் கவனமாக உடலை பராமரிக்க வேண்டும்.

அனைத்து பரிசோதனையும் உரிய இடைவெளியில் செய்து கொள்ள வேண்டும்.

பொதுவாக காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள் மற்றும் உலர் பழங்கள் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.

கர்ப்ப காலத்தில் திடீர் காய்ச்சல், தலை வலி வந்தால் டாக்டரின் ஆலோசனையின்றி எந்த மருந்துகளையும் எடுக்கக்கூடாது.

பிரசவ மாதத்தில் வாரந்தோறும் டாக்டரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.