பிரஷர் அதிகமானால் ஒரு கப் தயிர் சாப்பிடுங்க !

தயிரிலுள்ள சிறப்பு புரதங்கள், ஊட்டச்சத்து, மெக்னிசீயம், பொட்டாசியம் ஆகியவை ரத்த அழுத்ததை கட்டுப்படுத்துவதுடன், இதய ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

தினமும் தயிர் சாப்பிடுவது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சராசரி அளவை விட ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள், அதாவது 140/90 எம்.எம்.ஹெச்.ஜி., இருந்தால், தினமும் தயார் செய்த புளிக்காத தயிர் சாப்பிட வேண்டும்.

அப்போது ரத்த அழுத்தம் குறைந்து சராசரி நிலைக்கு வரும். இதிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள், அதிகளவு புரதத்தை உற்பத்தி செய்கின்றன. இது இயல்பாகவே ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

மேலும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க தயிரிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் உதவுகின்றன.

இதிலுள்ள புரோபயாடிக் பாக்டீரியா மற்றும் நல்ல கொழுப்புகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதுடன், விரைவாக மனநிலையை மேம்படுத்தும்.