ரொம்ப போர் அடிக்குதா... நல்லதுதான் !

ஒரு செயலை செய்வது பிடிக்காமல் 'போர்' அடித்தால் அது நல்லது என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.

அப்போது நம் மூளை யோசிக்க துவங்கும், புதிய முயற்சியில் கவனம் செலுத்தி அதில் வெற்றி பெற முயல்வோம்.

அதில் பெறும் சந்தோஷம் எதிலும் கிடைக்காது.

அப்போது தானாக மொபைல் போன் மற்றும் சோஷியல் மீடியாகளின் பயன்பாடு குறையும்.

எப்போதும் நம் மூளைக்கு உள்ளீடு கொடுத்துக்கொண்டே இருக்கக்கூடாது.

அது வேலை செய்யவும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வெற்றி நடை போட முடியும்.