புகை பிடிப்பதால் இதய நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டா?
புகையிலையில் உள்ள நிக்கோட்டின் ரத்த நாளங்களை சுருக்கி ரத்த அழுத்தத்தையும் இதய துடிப்பையும் உயர்த்துகிறது.
இதனால் கார்பன் மோனாக்சைடு ஆக்ஸிஜன் சப்ளையை குறைக்கிறது.
மேலும் தார் மற்றும் ரசாயனங்கள் நாளங்களில் கொழுப்புத் தட்டு சேர்த்து அத்தெரோ ஸ்கிளிரோசிஸ் உண்டாக்குகின்றன.
புகை பிடிக்காதவர்களும் பிறரின் புகையிலை புகையை சுவாசிப்பதால் இதயம், மூளை, நுரையீரல் நோய்களின் அபாயத்தில் சிக்குகிறார்கள்.
புகை பிடிப்பதினால் இதயத்திற்கு ரத்தம் தரும் நாளங்களின் சுவர் கிழிந்து மாரடைப்பு அல்லது திடீர் மரணம் ஏற்படும்.
இளம் வயதினரில்(45 வயதுக்குள்) புகை பிடிப்பவர்களுக்கு அத்தெரோ ஸ்கிளிரோசிஸ் இல்லாமல் கூட திடீர் இதய மாரடைப்பு அல்லது திடீர் மரணம் ஏற்படும்.
புகைப்பழக்கம் இதயம் மட்டுமல்லாமல் மூளை, நுரையீரல் போன்ற அனைத்தையும் பாதிக்கிறது என்பதால் அதை கைவிடுவது மிகவும் அவசியம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.