தசைகளை உறுதியாக்கும் கிச்சலி சம்பா..!

அதிக மகசூல் தரக்கூடிய பாரம்பரிய நெல் ரகங்களில் கிச்சலி சம்பாவும் ஒன்று. இதன் சாகுபடி காலம் 130 முதல் 140நாட்கள் ஆகும்.

கிச்சலி சம்பா அரிசியில் அதிகளவு உடலுக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து உள்ளது.

கிச்சலி சம்பா அரிசியை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். உடல் செழுமையும், பலமும் உண்டாகும்.

இதில் உணவு சமைத்து சாப்பிடும் போது, செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகி, உணவு எடுத்துக் கொள்ளும் அளவு தானாக குறையும்.

கிச்சலி சம்பா அரிசியில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளது.

இதை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது தசை மற்றும் எலும்புகள் பலப்படுகிறது.