டேஸ்டியான பலா விதை அல்வா

தேவையானப் பொருட்கள்: பலா விதை - 500 கிராம், சர்க்கரை - 200 கிராம், நெய் - 4 டேபிள் ஸ்பூன்.

கேசரி பவுடர், முந்திரி, திராட்சை மற்றும் தண்ணீர் - தேவையான அளவு.

பலா விதைகளை சுத்தம் செய்து தண்ணீரில் நன்றாக வேக வைத்து தோலுரித்து மசிக்கவும்.

கடாயில் சிறிது நெய் விட்டு சூடானவுடன், மசித்த பலாவிதைகளை போட்டு வதக்கவும்.

பின் சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்து அடுப்பை, மிதமான தணலில் வைத்துநன்றாக கிளறவும்.

அல்வா பதத்திற்கு வந்தவுடன், வறுத்த முந்திரி, திராட்சை, நெய் கலந்து இறக்கினால், சுவையான பலா விதை அல்வா இப்போது ரெடி.

குட்டீஸ்கள் ஆர்வமுடன் விரும்பி சாப்பிடுவர். மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.