இன்று தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம்

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜன., 30ம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான இன்று இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு காரணம் காந்திஜி தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் மிகுந்த இரக்கம் காட்டியதோடு, அவர்களுக்காகப் பணியாற்றினார்.

மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா கிருமியினால் தொழுநோய் ஏற்படுகிறது. தோல் மற்றும் நரம்புகளை பாதிக்கிறது.

இது 4000 ஆண்டுகள் பழமையானது. இப்பாதிப்புக்கு 'மல்டி டிரக் தெரபி' சிகிச்சை அளிக்கப்படுகிறது. உலகளவில் 2 லட்சம் பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழுநோய் குணப்படுத்தக்கூடியது. ஆரம்ப நிலையில் சிகிச்சையளித்தால் அங்க குறைபாட்டை தடுக்கலாம்.