ஜப்பானில் குழந்தைகளை விட செல்ல பிராணிகள் அதிகம்! ஆய்வில் தகவல்!

ஜப்பான் நாட்டில், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட செல்லப்பிராணிகளே அதிகம் இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இங்கு தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் வேகமாக வளர்ந்தாலும், கடந்த 16 ஆண்டுகளாக அங்கு குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே இருக்கிறது.

இதை, அவசரநிலை என பிரதமர் ஷிகேரு இஷிபா எச்சரித்த நிலையில், தற்போது வெளிவந்துள்ள புதிய தரவு மற்றொரு அதிர்ச்சியை தந்துள்ளது.

அது, ஜப்பானில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தான்.

கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகே இந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்துள்ளது.

அங்கு, 140 லட்சம் குழந்தைகள் உள்ள நிலையில், நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் எண்ணிக்கை 160 லட்சமாக உள்ளது.

ஜப்பானில் தனியாக வசிக்கும் முதியோர், துணைக்கும், ஆறுதலுக்கும் செல்லப்பிராணிகளை அதிகம் வளர்ப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் பொருளாதாரம், சமூக காரணிகளால் ஏற்படும் மாற்றமும் குழந்தை பெற்றுக்கொள்வதை தவிர்த்து செல்லப்பிராணி வளர்ப்பில் ஆர்வம் காட்ட வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.