மஞ்சள் காமாலை அறிகுறிகளும் காரணமும்!

மஞ்சள் காமாலை பொதுவாக மதுப்பழக்கம், பித்தப்பையில் கல்லடைப்பு, பித்தக்குழாய் அடைப்பு உள்ளிட்ட காரணங்களால் வரும். மேலும் ரத்த அணுக்கள் விரைவாக உடைவதால் வரும்.

சிறு வயதில் மஞ்சள் காமாலை வந்திருந்தால், மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. காமாலை உள்ளவர்களுக்கு எப்போது சிறுநீர் போனாலும் மஞ்சள் நிறமாக இருக்கும்.

தொற்று உள்ளவர்களுக்கு பசி இருக்காது. உடல் வலி, உடல் சோர்வு இருக்கும். வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும்.

சிகரெட் பிடிப்பவர்களுக்கு புகை டேஸ்ட் தெரியாது. தலை சுற்றல், மயக்கம் வரும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே டாக்டரை பார்க்க வேண்டும்

மஞ்சள் காமாலை இதில் 'டைரக்ட் பிளுருபின்', 'இன்டயரெக்ட் பிளுருபின்' என, இருவகைகள் உள்ளன.

டைரக்ட் பிளுருபின் இருந்தால் உயிருக்கு ஆபத்து. அது ரத்தத்தில் 1 அல்லது 1.2 மி.கிராம் என்ற அளவில்தான் இருக்கும். இது அதிகரித்தால் பிரச்னை வரும்.

ஈரலில் பிரச்னை இருந்தால், கவனமாக இருக்க வேண்டும். இன்று சாதாரண இளைஞர்களும் மது பழக்கத்தால் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகி இறக்கின்றனர்.

ஆகவே, அறிகுறிகள் மற்றும் மஞ்சள் காமாலை நோய் வந்தால் மது குடிப்பதை நிறுத்த வேண்டும்.

பெண்களை பொறுத்தவரை, 'ஆட்டோ இம்மியூன்' என்ற தசை திசுக்கள் எதிராக வேலை செய்வதாலும் பாதிப்பு வரும். இதை தடுக்க வைரஸ் தடுப்பூசி உள்ளது.

சமச்சீரான உணவு, உறக்கம், உடற்பயிற்சி இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை.