இன்று உலக பாம்புகள் தினம்!
உலகில் 3500 வகை பாம்புகள் உள்ளன. இவைகளில் 250 இனங்கள் மட்டுமே விஷம் உள்ளவை.
இந்தியாவில் உள்ள 300 பாம்பு இனங்களில் 52 வகை மட்டுமே விஷம் உடையவை.
இவை சுற்றுச் சூழல் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்விடம் அழிதல், பருவநிலை மாற்றம் காரணமாக இவை அழிவை சந்திக்கின்றன.
இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 16ல் உலக பாம்புகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பாம்புகள் பற்றிய தவறான பயத்தையும், கருத்துக்களையும் போக்கி, அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இத்தினம் வலியுறுத்துகிறது.
பாம்புகளில் சில மட்டுமே விஷமுள்ளவை. உலகின் நீளமான விஷப்பாம்பு 'கிங் கோப்ரா'.
பாம்புக்கு வெளிப்புற காது கிடையாது. அதன் தாடையில் உள்ள எலும்புகள் ஒலியை உணரச்செய்கிறது.
அதேபோல நாக்கின் மூலம் தண்ணீர், காற்று, நிலத்தில் உள்ள வாசனையை உணர்கிறது. இதனால் தான் எப்போதும் நாக்கை வெளியே நீட்டியவாறு உள்ளது.
பாம்புகளில் ராஜநாகம் நம் நாட்டின் தேசிய ஊர்வன விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.