இன்று சர்வதேச சுய பராமரிப்பு தினம்
சர்வதேச சுய பராமரிப்பு தினம் (International Self-Care Day) என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 அன்று அனுசரிக்கப்படுகிறது.
வாரத்தின் 7 நாட்களும் உடல், மன ஆரோக்கியத்தைப் பேண சுய-கவனிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தவும் இத்தினம் உருவாக்கப்பட்டது
உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்த தினசரி சுய பராமரிப்பு அவசியம்.
இதற்கு நல்ல தூக்கம், சீரான உணவு மற்றும் உடல் இயக்கம் ஆகியன மிகவும் இன்றியமையாதது. சுயபராமரிப்புக்கான டிப்ஸ் இதோ.
தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம்.
தினமும் 10 நிமிடங்கள் தியானம் அல்லது மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளவும்.
2 முதல் 3 லிட்டர் என போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
ஓவியம், நடனம் என உங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளில் சிறிது நேரம் செலவிடலாம்.
உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசியிலிருந்து சில மணி நேரம் விலகி இருக்கவும் (Digital Detox).
பிடித்தமான புத்தகங்களை வாசிப்பது அல்லது இசையைக் கேட்பது மனதுக்கு அமைதி தரும்