மரவள்ளி கிழங்கு புட்டு... ஈஸியாக செய்யலாம்!

தேவையானப் பொருட்கள்: மரவள்ளி கிழங்கு - 1, துருவிய தேங்காய் துருவல் - 1 கப், உப்பு, சர்க்கரை - தேவையான அளவு, ஏலக்காய் துாள் - அரை டீஸ்பூன்.

மரவள்ளி கிழங்கின் தோலை முழுமையாக நீக்கி, கேரட் துருவியால் கிழங்கை நைசாக துருவிக் கொள்ளவும்.

துருவிய கிழங்கை, காட்டன் துணியில் வைத்து பிழிந்து எடுக்க வேண்டும். இதனால் கிழங்கிலுள்ள ஈரப்பதம் வெளியேறும்.

பின், இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் கிழங்கை போட்டு, ஐந்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

இதனுடன், தேங்காய் துருவல் சேர்த்து, இரண்டையும் நன்றாக கிளறவும். தொடர்ந்து, ஏலக்காய் துாள், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறினால், மாவு புட்டு பதத்துக்கு வரும்.

அவ்வளவு தான் இப்போது, மரவள்ளி கிழங்கு புட்டு ரெடி.