இன்று உலக குடும்ப தினம்

ஒவ்வொருவரும் தன் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் மே 15ல் உலக குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.

ஐ.நா., சபையால் 1993ல் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டு, 1994 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எந்த சூழ்நிலையிலும் யாரும் தங்கள் குடும்பத்தை கைவிடக்கூடாது என இத்தினம் வலியுறுத்துகிறது.

குடும்பங்களுக்கு இடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்பு, தொழில் வாய்ப்பு பற்றி குடும்பங்களின் பங்களிப்பையும் இத்தினம் உணர்த்துகிறது.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் குடும்பம் மிக முக்கியமான பகுதியாகும். இது ஒரு பாதுகாப்பு உணர்வை வழங்குகிறது.

குடும்பங்கள், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் குழந்தை நல்வாழ்வு என்பது இந்த ஆண்டின் மையக்கருத்து.