புதினா சம்மந்தி ரெசிபி ரொம்ப ஈஸி !
தேவையானப் பொருட்கள்: புதினா இலை - 1 கப், கொத்தமல்லி இலை - ½ கப், பச்சை மிளகாய் - 3.
இஞ்சி - சிறிதளவு, எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி, உப்பு - தேவையானளவு.
புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சுத்தம் செய்து நன்றாக கழுவி எடுக்கவும்.
இதனுடன், பச்சை மிளகாய், இஞ்சி, தேவையானளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
பின், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கிவிட்டால், புதினா சம்மந்தி ரெடி.
இது வடை, பஜ்ஜி, சாண்ட்விச் மற்றும் சப்பாத்தி ஆகியவற்றுக்கு சைடு டிஷ் ஆக உட்கொண்டால் சுவை அள்ளும்.