கோடையில் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முலாம்பழம்

கோடையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் முலாம்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி, இரும்பு, கால்சியம் உப்பட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இதிலுள்ள அதிக நீர்ச்சத்து காரணமாக கொளுத்தும் கோடையில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

வைட்டமின் சி மற்றும் ஏ சத்தானது உடலிலுள்ள வெள்ளை அணுக்களைத் தூண்டி நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது.

நார்ச்சத்து, பைட்டோ கெமிக்கல்கள் குடலை ஆரோக்கித்துக்கு உதவுகிறது. பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளதால் ஆரோக்கியமான முறையில் சீராக உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது.

இதன் பண்புகள் மனதை அமைதியாக வைத்து, மன அழுத்தத்தை போக்கும்.

வைட்டமின் ஏ அதிகமுள்ளதால், கண் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும். பார்வைத்திறனை மேம்படுத்தவும், கண்புரை வராமல் தடுக்கவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைக்க உதவுகிறது.