நோய் எதிர்ப்பு சக்திக்கு ஈரல் மிளகு வறுவல் ரெசிபி இதோ
தேவையானப் பொருட்கள்: ஈரல் - 0.25 கிலோ, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், சீரகம், சோம்பு, மிளகு - தலா 1 டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு - 0.5 டீஸ்பூன்.
கருவேப்பிலை - ஒரு கொத்து, கரம் மசாலா பொடி, மஞ்சள் பொடி - 0.25 டீஸ்பூன், மிளகாய் பொடி - 0.50 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, உப்பு, எண்ணெய் - தேவையானளவு.
ஈரலை நன்றாக கழுவி மஞ்சள் துாள், மிளகாய் துாள், உப்பு, கரம் மசாலா சேர்த்து குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 4 விசில் விட்டு எடுக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பொடி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின், ஈரலை சேர்த்து கிளறிய பின், சீரகம், மிளகு அரைத்து சேர்த்து, தேங்காய் துருவலையும் சேர்க்க வேண்டும்.
இக்கலவை நன்கு கெட்டியான பின், இறக்கினால் சுவையான ஈரல் மிளகு வறுவல் இப்போது ரெடி.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவும்.
ரசம் சாதத்துக்கு சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.