மே 1 முதல் சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!

மே 1 முதல் எல்பிஜி (LPG) சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோகத்தில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.

ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்து, அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்ய நகரங்களில் குறைந்தபட்சம் 21 நாள்கள் என்று இருந்தது தற்போது 25 நாள்கள் வரை உயர்த்தப்பட்டது.

ஊரகப் பகுதிகளில் இது 45 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓடிபி அடிப்படையிலான விநியோகம் (DAC) கட்டாயமாக்கப்பட்டுள்ளது

உஜ்வாலா யோஜனா பயனர்களுக்கு ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் eKYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே புக் செய்ய முயலும் நபர்களின் புக்கிங் தானாகவே தடுத்து நிறுத்தப்படும்.

சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி விரைவில் குழாய் மூலம் எரிவாயு விநியோகத்தை உருவாக்க மத்திய அரசு முயன்று வருகிறது.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக, சிலிண்டர் விலையில் மாற்றங்கள் செய்யப்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.