இன்று சர்வதேச அனிமேஷன் தினம்
அனிமேஷனின் முக்கியத்துவம், அழகை ஒவ்வொரு நாளும் 'டிவி'யில் காண்கிறோம்.
அசையும் படங்களை கொண்டு உருவாக்கப்படும் அனிமேஷன் படங்கள் தற்போது குழந்தைகளை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.
அனிமேஷனின் பயன் 'டிவி', இசை, மீடியா, இன்டர்நெட், விளையாட்டு துறைகளில் பயன்படுகிறது.
பிரான்சின் சார்லெஸ் எமிலி ரொனால்ட், 1892 அக். 28ல் உலகின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை வெளியிட்டார்.
இச்சாதனையை நினைவுபடுத்தும் விதமாக 2002ல் உலக அனிமேஷன் தினத்தை சர்வதேச அனிமேஷன் சங்கம் துவக்கியது
இந்த நாள், அனிமேஷன் கலையின் பங்களிப்புகளைப் பாராட்டவும், அதன் ஆற்றலை ஊக்குவிக்கவும் கொண்டாடப்படுகிறது
மேலும் அனிமேஷன் துறையின் கலை மற்றும் கலாச்சார தாக்கத்தை முன்னிலைப்படுத்தவும் உதவும்.