இன்று உலக சேமிப்பு தினம்
உலக சேமிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்., 30ல் அன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்நாள் உலக சிக்கன தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
வாழ்க்கையில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என தெரியாது.
எதிர்கால வாழ்க்கைக்கு சேமிப்பு மிக அவசியம். குறிப்பாக சம்பாதிப்பதை விட அதை சேமிப்பது முக்கியம்.
சேமிப்பு என்பது பணத்தை சேமிப்பது மட்டு மல்ல. மின்சாரம், உணவு, குடிநீர், இயற்கை வளங்கள்என பலவற்றை உள்ளடக்கியது.
சிக்கனமும் சேமிப்பும் ஒரு குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பங்கு வகிக்கிறது.
1924ல் இத்தாலியில் சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாட்டில் இத்தினம் உருவாக்கப்பட்டது.
இருப்பினும் 1984ல் அக். 31ல் நம் நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதால் இந்தியாவில் அக்., 30ல் உலக சிக்கன தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.