குட்டீஸ்களுக்கு பிடித்தமான கருப்பட்டி பணியாரம்
தேவையானப் பொருட்கள்: பாசிப்பருப்பு - 200 கிராம், கருப்பட்டி - 100 கிராம், பச்சரிசி - 100 கிராம், உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்.
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்துாள், எண்ணெய் மற்றும் தண்ணீர் - தேவையான அளவு.
பாசிப்பருப்பு, பச்சரிசி, உளுத்தம் பருப்பை, தண்ணீரில் ஊற வைத்து, கெட்டியான மாவாக அரைக்கவும்.
பொடித்த கருப்பட்டியுடன் தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைத்து வடிகட்டவும்.
அதனுடன் அரைத்த மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்துாள் சேர்த்து கலக்கவும்.
பணியாரக்கல்லை சூடாக்கி, குழிகளில் சிறிதளவு எண்ணெய் விட்டு, மாவு கலவையை ஊற்றி, இருபுறமும் வேக வைக்கவும்.
இப்போது சுவையான, 'கருப்பட்டி பணியாரம்' ரெடி. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.