தேர்வு காலங்களில் பெற்றோரின் பங்கு என்ன?

தேர்வு காலங்களில் மகன், மகளை பிற மாணவ, மாணவியருடன் பெற்றோர் ஒப்பிடக்கூடாது.

இன்று தேர்வு எழுதினாயா, எளிமையாக இருந்ததா, நாளைய தேர்வுக்கு தயாராகி விட்டாயா, தைரியமாக நன்கு படித்து தேர்வெழுது என ஊக்கப்படுத்த வேண்டும்.

குறிப்பாக மதிப்பெண்களை மட்டும் பார்க்காமல் அவர்களின் முயற்சியைப் பாராட்டுபது மிகவும் அவசியமாகும்.

வீட்டில் இருப்பவர்கள் தேர்வு காலத்தில், 'டிவி', மொபைல் போன் போன்றவற்றின் பயன்பாட்டை குறைத்து தேர்வுக்கு தயாராகிறவர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கித்தர வேண்டும்.

இரவு, அதிகாலையில் அவர்களுடன் இருக்க வேண்டும். நல்ல எண்ணங்களை மாணவர் மனதில் பெற்றோர் விதைக்க வேண்டும்.

வீட்டில் பதற்றமில்லாதஅமைதியான சூழலை உருவாக்க வேண்டும். குழந்தைகளுடன் மனம் திறந்து பேசி பயத்தைப் போக்க உதவலாம்.

ஊட்டச்சத்து மிக்க உணவு மற்றும் போதுமான தூக்கம் மாணவர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும்.