புற்றுநோயை தடுக்க வாய்ப்பு... விஞ்ஞானிகள் கூறுவதென்ன?
உலகில் புற்றுநோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கு உணவுமுறை மாற்றம், உடல்பருமன், உடற்பயிற்சியின்மை, சுற்றுச்சூழல் மாசு, தொற்று, மரபணு உட்பட பல காரணங்கள் உள்ளன.
இருப்பினும் புகையிலை, புகைப்பிடித்தல், மது ஆகியவை 48 சதவீதமாக உள்ளது.
எனவே, இந்த பழக்கவழக்கத்தை தவிர்த்தாலே, புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தில் 50 சதவீதத்தை குறைக்கலாமென, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதன்மூலம் நுரையீரல் சுவாச அமைப்பு, வயிறு, இனப்பெருக்க உறுப்பு பாதிப்பு உள்ளிட்ட புற்றுநோய்களை தடுக்கும் வாய்ப்புள்ளது.
எனவே, இதுகுறித்து கட்டாயமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்பது விஞ்ஞானிகளின் வலியுறுத்தலாகும்.