பலாக்காய் பிரியாணி ரெசிபி இதோ
தேவையானப் பொருட்கள்: பலாக்காய் - 250 கிராம், பாசுமதி அரிசி - 1.5 கப், வெங்காயம் - 2, தக்காளி - 1, இஞ்சி, பூண்டு விழுது - 1.5 டீஸ்பூன், தயிர் - 0.5 கப், பச்சை மிளகாய் - 3.
புதினா, கொத்தமல்லி இலை - தலா 0.25 கப், பிரியாணி மசாலா - 1.5 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள்- 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம் - சிறிதளவு, ஏலக்காய் - 5.
பிரியாணி இலை - 2, நெய் அல்லது எண்ணெய், உப்பு - தேவையான அளவு, மஞ்சள் துாள் - 0.50 டீஸ்பூன்.
பலாக்காயை தோல் நீக்கி, உட்புற சதையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து, தேவையான அளவில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, சூடானவுடன் பட்டை, லவங்கம், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
பின் நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சிறிதாக நறுக்கிய தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தொடர்ந்து, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இதில், மிளகாய் துாள், மஞ்சள் துாள், பிரியாணி மசாலா, தயிர் சேர்த்து நன்றாக கிளறவும்.
பின், மசாலாவில், ஏற்கனவே வேக வைத்த பலாக்காய் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அரிசியை சேர்க்கவும். 1.5 கப் அரிசிக்கு, 2.5 கப் அளவில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
புதினா, நறுக்கிய கொத்தமல்லியை தூவி, மிதமான தணலில் வைத்து, 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக விட்டால், சுவையான பலாக்காய் பிரியாணி ரெடி.