நீரிழிவு நோய் இல்லை.. ஆனால் கால் எரிச்சல் உள்ளதா? 
        
 பொதுவாக ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், வைட்டமின் குறைபாடு, பூஞ்சான் தொற்று, மதுப்பழக்கம் ஆகிய காரணங்களால் நரம்பு முனைகள் பாதிக்கப்பட்டு கால் எரிச்சல் வரும். 
        
மேலும் நரம்பு முனைகள் பாதிப்பு இருந்தாலும் கால் எரிச்சல் வரலாம். 
        
 காலில் அணியும் செருப்பு, ஷூ சேராமல் இருந்தாலும் இப் பாதிப்பு வர வாய்ப்புள்ளது.  
        
எச்.ஐ.வி., நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கால் எரிச்சல் வரும்.  
        
உடலில் யூரியா கூடுதல் இருந்தாலும் கிட்னி பாதிக்கப்பட்டு கால் எரிச்சல் ஏற்படும். இதற்கு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெற்று எளிதாக சரி செய்ய முடியும்.  
        
டாக்டரிடம் ஆலோசனை செய்த பின் அதன் அடிப்படையில் சிகிச்சை பெற வேண்டும்.  
        
கால் எப்போதும் துாய்மையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது அவசியம்.