கமகமக்கும் மிளகு பூண்டு குழம்பு ரெசிபி இதோ!

தேவையானவை: மிளகு - 4 தேக்கரண்டி, சீரகம் - ஒரு தேக்கரண்டி, புளி - எலுமிச்சை அளவு

பூண்டு - 10 பல், தோலுரித்த சின்ன வெங்காயம் - 10, கறிவேப்பிலை - சிறிதளவு,

கடுகு, வெந்தயம் - தலா கால் தேக்கரண்டி, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை : புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.

இதனுடன் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், பூண்டு சேர்த்து தாளிக்கவும்.

இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து கிளறவும். பின்னர் புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். மிளகு - பூண்டு குழம்பு ரெடி!