குழந்தைகளை பாதிக்கும் ஆர்.எஸ்.வி., வைரஸ்!

ஆர்.எஸ்.வி., எனப்படும் சுவாச நுண்குழல் அழற்சி வைரஸ், குழந்தைகளிலும், முதியவர்களிலும் நுரையீரல் தொற்றை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு வருடமும், ஆர்.எஸ்.வி. நோய்த்தொற்றால், ஐந்து வயதுக்கு கீழுள்ள 36 லட்சம் பேர் பாதிக்கப்படுவதும், 1 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாகவும், உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து காற்று வழியாக தொற்று பரவுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட இரண்டு - எட்டு நாட்களில், அறிகுறிகள் தெரியும்.

ஆர்.எஸ்.வி., நோய்தொற்று, மேல் சுவாசப் பாதையை பாதித்தால், சளி, இருமல், தும்மல், லேசான காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.

நுரையீரலை பாதித்தால், இருமல், மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

ரத்த பரிசோதனை, எக்ஸ்-ரே, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மூலம் ஆர்.எஸ்.வி., நோய் தொற்றை உறுதிப்படுத்த முடியும்

குழந்தையின் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, தாய்ப்பால் தருவதை நிறுத்தக் கூடாது.

மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல், தாய்ப்பால் குடிக்க முடியாமல் போவது போன்ற தீவிர அறிகுறிகள் இருந்தால், உடனடியாக குழந்தையை, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.