ஷிகெல்லா தொற்று என்றால் என்ன? கேரளாவில் பரவும் இந்நோய் குறித்து அறிந்துகொள்வோம்!
ஷிகெல்லா என்பது மனிதனின் குடலைப் பாதிக்கும் ஒரு ஆபத்தான பாக்டீரியா தொற்று நோயாகும்.
இந்நோய்த் தொற்று ஏற்பட்டால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், கடும் வயிற்று வலி, வாந்தி, உடல் சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்படும்.
நோய் தீவிரமடையும் பட்சத்தில், மலத்தில் இருந்து ரத்தம் வெளியேறும்.
சுகாதார வசதிகள் குறைவாக இருக்கும் நீர்நிலைகள், அசுத்தமான பகுதிகளில், இந்த தொற்று எளிதில் பரவும்.
நோய் பரவலை தவிர்க்க குடிப்பதற்கும், சமைப்பதற்கும் காய்ச்சிய நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக, குழந்தைகள் உட்பட அனைவரும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிப்பது சிக்கல்கள் ஏற்படுவதை தடுக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.