மார்பக புற்றுநோய் வந்துவிட்டாலே மார்பகங்களை அகற்ற வேண்டுமா ?

30, 40 ஆண்டுக்கு முன் வரை, சின்ன கட்டியாக இருந்தாலும் மார்பகத்தை முற்றிலும் அகற்றும் சூழல் இருந்தது.

தற்போது, ஆராய்ச்சி பல மேற்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சின்ன கட்டிகளுக்கு முழுமையாக அகற்றவேண்டிய தேவையில்லை; அந்த கட்டியுள்ள பகுதியை மட்டும் எடுத்தால் போதுமானது.

முன்பு 4 செ.மீ., 5 செ.மீ., கட்டிகளுள்ள பகுதியை எடுக்கும்போது, அந்த மார்பக வடிவமைப்பு, அளவு சரியாக இருக்காது. இதனால், முழுமையாக மார்பகம் அகற்றும் படி இருந்தது.

தற்போது, பிரெஸ்ட் ஆன்கோ பிளாஸ்டி எனும் டெக்னிக் பயன்படுத்தப்படுவதால், சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படுகிறது.

இதனால், மார்பகத்தின் பகுதியை எடுத்தாலும்; அளவு, வடிவமைப்பில் மாற்றமின்றி முன்பிருந்தது போன்று இருக்கக்கூடும்; பாதுகாப்பானது கூட என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.