வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய மருத்துவ டிப்ஸ்...
கனிந்த வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து நெருப்புக் காயங்கள் மேல் வைத்து வெற்றிலையால் மூடிக் கட்டுப்போட்டால் புண்கள் விரைவில் ஆறிவிடும்
கொழுந்தாக உள்ள கொய்யா இலைகளை நைசாக அரைத்துப் பூசினால் அக்கி, தேமல், சொறி, சிரங்கு குணமடையும்.
கட்டிப் பெருங்காயத்தை சிறிதளவு எடுத்து, வெந்நீரில் கரைத்துக் குடித்துவர, இருமல் நின்றுவிடும்
உடற்சூடு குறைய கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றைத் தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் குளித்து வரலாம். உடல் உஷ்ணம் நீங்குவதுடன் முடியும் நன்கு வளரும்.
துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும்.
ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் ரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.
நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும்.