இதயத்தை காக்க சிறிய மாற்றம்... ஆனால், பெரிய பலன் !

மாரடைப்பு, பக்கவாதம், இதய பாதிப்பு குறித்து சிட்னி பல்கலை ஆய்வு மேற்கொண்டது.

அதில், துாக்கம், உணவுப்பழக்கம், உடற்பயிற்சியில் தினமும் சிறிய அளவில் மாற்றம் செய்து மேம்படுத்தி வந்தால் பாதிப்புக்கான வாய்ப்பை குறைக்கலாம் என தெரிவித்துள்ளது.

63 வயதுக்கு மேற்பட்ட 53,242 பேரிடம் எட்டு ஆண்டுகள் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் தினமும் ஒருவர் தன் வழக்கத்தை விட கூடுதலாக 11 நிமிட துாக்கம், 4.5 நிமிடம் உடற்பயிற்சி 'கால் கப்' காய்கறிகள் என மாற்றம் செய்தனர்.

இறுதியில், இதய பாதிப்புக்கான ஆபத்து 10 சதவீதம் குறைந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

எனவே, மாரடைப்பு, பக்கவாதம், இதய பாதிப்புக்கான வாய்ப்பை குறைக்கலாம் சிறிய மாற்றத்தின் மூலம் மேற்கொள்ளலாம் என இந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது.