இளம்பெண்களிடம் அதிகரிக்கும் புகை பழக்கம்... பிறக்கும் குழந்தையை பாதிக்குமா?

இன்றைய நாகரிக உலகில் இளம் பெண்களிடம் புகை பழக்கம் அதிகரித்துள்ளது.

புகை பிடிக்கும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை, கார்டியோ வாஸ்க்குலர் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

பேறுகாலத்தில் புகைபிடித்தால் குழந்தைக்கு பிறப்பு குறைபாடு, கருச்சிதைவு, இறப்பு கூடஏற்படலாம்.

பாலுாட்டும் தாய்மார்கள் புகைபிடிப்பதால் சருமம், நகம், முடியில் நிக்கோடின் இருக்கும்.

அதனால், குழந்தைகளுக்கு தைராய்டு பிரச்னை, சிறுவயதில் பூப்பெய்தல் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, சிகரெட் புகைப்பவர்கள், அவர்களது உடலுக்காக மட்டுமின்றி குடும்ப நன்மைக்காகவும் புகைப்பதை தவிர்க்க முன் வர வேண்டும்.