பழமை மாறா புதுமையான திருமணத்துக்கான அழகிய சில இடங்கள்!

ஜோத்பூரிலுள்ள கம்பீரமான, பழமையான அரண்மணையில் திருமணம் செய்வது பலரின் தீராக்கனவு. பிரபலங்கள் பலரும் இங்கு திருமணம் செய்ய முன்வருவது குறிப்பிடத்தக்கது.

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா, கடற்கரை திருமணத்துக்கான இடமாகவும் உள்ளது. கோவளம், கொச்சி, ஆலப்புழாவை இதற்கு தேர்வு செய்யலாம்.

ரிஷிகேஷ்... கங்கை நதியால் ஆசிர்வதிக்கப்பட்ட இந்த ஆன்மிக பூமியில், கலாச்சார முறைப்படி திருமணம் செய்ய பலரும் விரும்புகின்றனர்.

ஆக்ரா... அன்பின் உருவகமான அழகிய தாஜ்மஹாலின் பின்னணியில் திருமண வாழ்வை துவக்க, இளசுகளிடம் பலத்த வரவேற்புள்ள இடம் இது.

கோவா... நினைத்தாலே மகிழ்ச்சி அளிக்கும் இடங்களில் இது ஒன்று. பீச் வெட்டிங், ஹனிமூன் என பலரின் ஃபேவரீட் இடமாக இது உள்ளது.

சிம்லா... உலகம் முழுவதிலுமிருந்து தம்பதிகளை வெகுவாக ஈர்க்கும் இடம் இது. பனி படர்ந்த மலைகள் மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை அளிக்கிறது.

கம்பீரமான அரண்மனையில் திருமணம் செய்யக்கூடிய மற்றொரு இடம் ஜெய்ப்பூர். இங்கு, ராஜ் அரண்மனை மற்றும் சமோட் அரண்மனை மிக முக்கியமான திருமண அரங்குகளாகும்.