நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள் சில

அலுவலக பணியாளர்கள், ஐ.டி., ஊழியர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்பவர்களுக்கு நீரிழிவு காரணமாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, கம்ப்யூட்டரை 'ஆப்' செய்த உடனேயே 10 நிமிட நடை பயிற்சி செய்வது, உணவை செரிமானம் செய்யவும், சர்க்கரை அளவை குறைக்கவும் உதவும்.

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வதை தவிர்த்து, வீட்டில் சமைத்து சாப்பிடுவது நல்லது.

ஆழ்ந்த துாக்கத்துக்கு மாலை 6:00 மணிக்கு மேல் 'கேபைன்' பானங்களை தவிர்க்கலாம்.

வேலையை துவங்குவதற்கு முன், சில நிமிடங்கள் ஸ்ட்ரெச்சிங் செய்வது, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

நீண்ட நேரம் 'டிவி' பார்ப்பதை விட, தோட்ட வேலை, விளையாட்டு, செல்லப்பிராணிகளை நடை பயிற்சிக்கு அழைத்து செல்வது, யோகா பயிற்சி போன்றவை செய்யலாம்.

இரவு உணவை 9:00 மணிக்கு முன் சாப்பிடுவது, போதியளவு தண்ணீர் குடிப்பது, குறைந்தது 7 - 8 மணி நேர துாக்கம் ஆகியவை, நீரிழிவு பாதிப்பை கட்டுக்குள் வைக்க உதவும்.