வல்வோ டெர்மடோசிஸ் பிரச்னைக்கு ஹெல்த் டிப்ஸ் சில..

வல்வோ டெர்மடோசிஸ் பிரச்னைக்கு சரியான மருந்துகள், தோல் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம்.

அறிகுறிகளை அதிகப்படுத்தும் காரணிகளை கண்டறிந்து தவிர்க்க வேண்டும்.

வல்வா ஆரோக்கியம் என்பது பெண்களின் முழுமையான ஆரோக்கியத்தின் ஒரு அங்கம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அலர்ஜி ஏற்படுத்தும் சோப்பு உபயோகிப்பதை தவிர்க்கலாம். சுத்தமான நீரால் கழுவினாலே போதும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

நம் வாயின் உட்பகுதி மற்றும் வல்வா பகுதியும் ஒரே மாதிரியான மென்மையான தோல் தன்மை கொண்டவை. எனவே, முடிந்தவரை அப்பகுதியில் ஹேர் ரிமூவரை பயன்படுத்தக் கூடாது.

கட்டாயம் என்றால், அலர்ஜி பரிசோதனை செய்து, எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே உபயோகிக்க வேண்டும்.

எல்லா அரிப்புக்கும் ஒரே கிரீம் உபயோகிக்கக் கூடாது. அவரவரின் தோல் தன்மை, பிரச்னைக்கு ஏற்ப, டாக்டர் பரிந்துரைத்த கிரீம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மன அழுத்தம் இதற்கு மிக முக்கியமான காரணம் என்பதால் அதை போக்க சிகிச்சை எடுக்கலாம்.

எந்த வயதிலும் இப்பிரச்னை வரலாம். தோலை சுகாதாரமாக பராமரிப்பது முக்கியம்.