மார்பகங்களை சுகாதாரமாக பராமரிக்க சில டிப்ஸ்!
குழந்தை பிறந்த பின், மார்பகங்களை சுகாதாரமாக பராமரிப்பது முக்கியம். பம்பிங் உபயோகித்தாலும் இதே போன்ற சுகாதாரத்தை பின்பற்றுவது நல்லது.
குழந்தை பால் குடிக்கும் போது மார்பக காம்புகளில் வெடிப்புகள் விழலாம். வறட்சியாக இருந்தால், வெடிப்புகளின் வாயிலாக தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
இதை தவிர்ப்பதற்காக, மார்பகங்களை ஈரப்பசையுடன் வைத்திருக்க வேண்டும்.
வெடிப்புகள் ஏற்பட்டால், அதை குணப்படுத்த,'லேனோலின்' சேர்ந்த கிரீம்களை தடவலாம்.
அதிக காரத்தன்மையுள்ள சோப்புகளை உபயோகிக்கக் கூடாது.
அதில் உள்ள கடினமான வேதிப் பொருட்கள், தோலில் வறட்சியை ஏற்படுத்தும்.
தாய்ப்பால் தருவதற்கு முன் மற்றும் பின், வெதுவெதுப்பான நீரில் மார்பகங்களை துடைப்பது கட்டாயம்.