மெனோபாஸ் குறித்த சில புரிதல்கள்...
'மெனோபாஸ்' என்பது எல்லாப் பெண்களும் எதிர் கொள்ள வேண்டிய பிரச்னை. நம் நாட்டு பெண்களுக்கு, 46 -51 வயதில், மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிரந்தரமாக நிற்கலாம்.
40 வயதிற்கு முன் மாதவிடாய் வருவது நின்றால், அதற்கு 'பிரீ மெச்சூர் மெனோபாஸ்' என்று பெயர். ஐந்து சதவீதத்திற்கும் குறைவான பெண்களுக்கே இது இருக் கும்.
குறிப்பாக, பெருநகரங்களில் வாழும் பெண்களும், அந்நகரங்களின் குடிசைப் பகுதியில் வாழும் பெண்களும், விரைவாகவே மெனோபாஸ் நிலையை அடைந்து விடுகின்றனர்.
தொடர்ச்சியாக ஒரு வருடம் மாதவிடாய் வராமல் இருந்தால், மெனோபாஸ் என்று புரிந்து கொள்ளலாம்.
பெண் குழந்தை பிறக்கும் போதே, குறிப்பிட்ட எண்ணிக்கையில், கருமுட்டை உற்பத்தி நிர்ணயம் ஆகிறது.
குறிப்பிட்ட வயதில், கருமுட்டை உற்பத்தி குறைந்ததும், கருக்குழாய் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்புகளும் படிப்படியாக குறைந்து விடுகின்றன.
இதனால், ஒவ்வொரு மாதமும் முதிர்ச்சியடைந்து, உடைந்து வெளி வருவதும், முழுவதுமாக நின்று விடுகிறது.