டேஸ்டியான ஸ்வீட்கார்ன் சீஸ் ரோல் ரெசிபி

தேவையான பொருட்கள்: வேகவைத்த ஸ்வீட்கார்ன் - 1 கப், பிரெட் துண்டுகள் - 10, வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 1, மிளகாய் துாள் (அ)சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்.

துருவிய சீஸ் - அரை கப், மிளகுத்துாள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா - கால் டீஸ்பூன், மைதா மாவு - 2 டீஸ்பூன், கொத்தமல்லி இலை-சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையானளவு.

ஒரு பாத்திரத்தில் ஸ்வீட்கார்ன், சீஸ், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, மிளகாய் துாள், மிளகுத்தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை நன்றாக கலக்கவும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் மைதா மாவு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல கரைத்து வைக்கவும்.

பிரெட் துண்டின் ஓரங்களை (Edges) கத்தியால் வெட்டி நீக்கி, லேசாக தண்ணீர் அல்லது பாலில் நனைத்து, உடனே கைகளால் அழுத்தி தண்ணீரை பிழிந்துவிடவும்.

இப்போது பிரெட்டின் நடுவே, ஸ்வீட்கார்ன், சீஸ் கலவையிலிருந்து ஒரு ஸ்பூன் வைத்து, மடித்து, உருளை அல்லது நீள வடிவில் பிரெட்டை இறுக்கமாக மடிக்கவும்.

பிரெட் ஓட்டைகளில் மைதா பேஸ்டை தடவி நன்கு ஒட்டவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அவற்றை மிதமான தணலில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்தெடுத்தால், சுவையான ஸ்வீட்கார்ன் சீஸ் ரோல் ரெடி.

இதை தக்காளி சாஸ், அல்லது புதினா சட்னியுடன் பரிமாறலாம். குழந்தைகள் விருப்புச் சாப்பிடுவர்.