குழந்தைகளிடம் அலட்சியம் செய்யக்கூடாதவை

காய்ச்சல் 2 நாட்கள் தாண்டி தொடர்ந்தாலோ, சளி, இருமல் அதிகமாகவோ, மூச்சுவிட சிரமம் இருந்தாலோ,கட்டாயம் செக்அப் செய்துகொள்ள வேண்டும்.

பதின்பருவ வயதில் நன்றாக விளையாடிய குழந்தை திடீரென்று சோர்ந்து இருப்பது, குழந்தைகளின் எடை தொடர்ந்து குறைவது, போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது.

மருத்துவமனைக்கு அவசரமாக இரவில் குழந்தையை துாக்கிக்கொண்டு வருபவர்களில், 70 சதவீதம் பேர் இதுபோன்ற அறிகுறிகளை கண்டுகொள்ளாதவர்களே.

கண் பிரச்னையால் பல குழந்தைகள் மதிப்பெண்கள் குறைவதை காண்கிறோம். சிறு குறைபாடுகளையும் அலட்சியப்படுத்தாமல், கவனம் செலுத்த வேண்டும்.

படிப்பில் மந்தமான குழந்தைகளுக்கு ஐ.க்யூ., குறைபாடு பரிசோதனை செய்ய வேண்டும். 2, 3ம் வகுப்பு படிக்கும் போதே கவனித்து, தெரப்பி வழங்கினால் மேம்படுத்தலாம்.

இருமல், ஆன்டிபயாடிக் போன்ற மருந்துகளை, கட்டாயம் டாக்டர்கள் பரிந்துரையின்றி வாங்கக்கூடாது.