ஆசியாவின் பெரிய உயிரியல் பூங்கா இதுதான்!

ஆந்திராவின் திருப்பதியில் செயல்படுகிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா.

பரப்பளவு அடிப்படையில் ஆசியாவின் பெரிய விலங்குகள் பூங்கா என, இது அழைக்கப்படுகிறது.

பரப்பளவு 22.39 சதுர கி.மீ., இது 1987 செப்.,29-ல் உருவாக்கப்பட்டது.

இங்கு மயில், கிளி, மைனா, வாத்து, பூதாரை உள்ளிட்ட 46 வகையான பறவையினங்கள் உள்ளன.

மேலும், 31 வகையான பாலூட்டிகள், 7 வகையான ஊர்வன உயிரினங்கள் சிங்கம், வெள்ளைபுலி, கரடி, யானை, நீர்யானை, மான், சிறுத்தை, உள்ளிட்ட பல வகை விலங்குகள் உள்ளன.

இப்பூங்காவை ஆண்டுக்கு 7 லட்சம் சுற்றுலாபயணிகள் பார்வையிடுகின்றனர்.