ஏராளமான சத்துகள் நிறைந்தது.... கேரட் தினம் இன்று!

மத்திய ஆசியாவிலுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாரசீகப் பகுதியான ஈரானில், 10ம் நுாற்றாண்டில், முதன்முதலில் கேரட் அறிமுகமானது.

அங்கிருந்து ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என, உலகெங்கிலும் பரவியது. துவக்கத்தில் ஊதா, மஞ்சள், வெள்ளை நிறத்திலேயே இருந்தன.

நெதர்லாந்து விவசாயிகள், 16ம் நுாற்றாண்டில் அறிமுகப்படுத்திய ஆரஞ்சு நிற கேரட், தற்போது உலகம் முழுக்க புழக்கத்திலுள்ளன.

பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, கே, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகிய சத்துகள் இதில் நிறைந்துள்ளன.

கண் பார்வை, தோல், இதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

குறைந்த கலோரி, கொழுப்பு இருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது. மாலைக்கண் நோய்க்கும் தீர்வாக உள்ளது.

சாலட், சூப், அல்வா, கேக் மற்றும் புட்டிங் போன்ற பல உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஏப்.4ல் உலக கேரட் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள ஹோல்ட்வில்லி பகுதியில், இது முக்கிய விவசாய பயிராக உள்ளது; உலகின் கேரட் தலைநகராகவும் கருதப்படுகிறது.