யுபிஐ... பணம் அனுப்புவதை எளிதாக்க புது வசதி!
தற்போதைய காலத்தில், யுபிஐ பண பரிவர்த்தனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன.
மாதந்தோறும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து கொண்டே உள்ளன.
யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு புது புது பிரத்யேக வசதிகளை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், யுபிஐ மூலம் பணப் பரிமாற்றம் செய்ய பின் நம்பருக்கு பதிலாக இனி முக அடையாளத்தை பயன்படுத்தப்படவுள்ளது.
இவ்வசதியை வங்கி மற்றும் நிதித்துறைகளில் செயல்படுத்த ஆதார் முகமை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, விரல் ரேகை மற்றும் முக அடையாளம் (face) மூலம் பயனர்கள் யுபிஐ பேமென்ட் மேற்கொள்ளலாம்.
தற்போதுள்ள யுபிஐ பேமென்ட் முறையில் பின் பதிவிட்டு பணம் அனுப்பும் நடைமுறை உள்ளது.
பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் நடைமுறைக்கு வருவதன் மூலம் யுபிஐ பேமென்ட்டை பயனர்கள் விரைந்து மேற்கொள்ள வசதியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.