ஹியர் போன் பயன்படுத்துவதால் சிறுவர்களின் காதில் பாதிப்பு ஏற்படுமா? தீர்வென்ன?
அலைபேசியை பயன்படுத்தும் பலரும் தற்போது ஹெட் போன் பயன்படுத்துகின்றனர்.
தற்போது நாய்ஸ் கேன்ஸ்லேஷன் ஹெட்போன்கள் அதிகளவில் வருகின்றன. இவை காதில் பிற சத்தங்களை நுழைய விடாமல் 60 முதல் 80 டிசிபில் ஒலியை காதுக்குள் பாய்ச்சுகிறது.
காதிலுள்ள ஜவ்வு அதிர்ந்து குருத்து எலும்புகள் வழியாக நரம்புகளுக்கு சமிக்ஞை அனுப்பி, அதை மூளை உணர்ந்து நமக்கு ஒலியாக கேட்கிறது.
தொடர்ந்து 3 ஆண்டுகள் ஹெட்போன் பயன்படுத்தினால் காதின் ஜவ்வு குருத்து எலும்புகள், நரம்புகள் பாதிக்கப்படும். துவக்க நிலையிலேயே கண்டறிந்து பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது.
காதில் கேட்கும் திறன் குறைவதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது மாணவர்களுக்கு கேட்காது. இதனால், அவர்களது கற்றல் திறன் பாதிக்கப்படும்.
காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் உடனடியாக சென்று காதின் கேட்கும் திறனை பரிசோதனை செய்ய வேண்டும்.
காதின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டால் குணப்படுத்த முடியாது நிரந்தரமான ஊனம் ஏற்படும். காது கேட்கும் கருவியை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
சிறியதாக பாதிப்பு இருக்கும் போதே கண்டறிந்து ஹெட் போன் பயன்படுத்துவதை தவிர்த்தால் காலப்போக்கில் தானாக சரியாகவும் வாய்ப்பு உள்ளது.