குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வெஜிடபிள் இட்லி
தேவையானப் பொருட்கள்: இட்லி மாவு - 2 கப், மிளகாய் தூள் -1.5 டீஸ்பூன், பீட்ரூட் - 1, பீன்ஸ் - 50 கிராம், கேரட் - 100 கிராம், மஞ்சள் தூள் - 0.5 டீஸ்பூன்.
வேக வைத்த பட்டாணி - 2 டீஸ்பூன், கொத்தமல்லி இலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
இட்லி மாவில் பொடியாக நறுக்கிய பீட்ரூட், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதனுடன், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையானளவு உப்பு சேர்த்து மாவை நன்றாக கலக்கவும்.
பிறகு அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து, இட்லிகளாக வார்த்து வேக விடவும்.
இப்போது, சுவையான வெஜிடபிள் இட்லி ரெடி. தேங்காய் சட்னி, புதினா சட்னியுடன் சாப்பிட சுவை அள்ளும்.
காய்கறிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படக்கூடும்.