சம்மர் வந்தாச்சு... மின் கட்டணத்தை குறைக்கணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!
கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ், ஏசி போன்ற மின் சாதன பொருள்களால் ஏற்படும் மின் கட்டணம் கூடுதல் சுமையாக மாறுகிறது.
வீட்டிற்கு வெளியே செல்லும்போதோ அல்லது வீட்டை சுற்றி ஏதாவது வேலையில் இருக்கும்போதே மின்சாதனங்களை அணைத்துவிட்டு செல்ல வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட ஏசிகளை மாற்றிவிட்டு புதிய இன்வெர்ட்டருடன் கூடிய புதிய ஏசியை வாங்கிக்கொள்ளலாம்.
ஒரு வீட்டின் மொத்த மின் நுகர்வில் 15 விழுக்காடு குளிர்சாதனப்பெட்டிக்கு செல்கிறது. இதனால் அவற்றைச் சுற்றி காற்றோட்டம் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள்.
இதனால் அதன் தொழில்நுட்பகங்களுக்கு செல்லும் மின்சாரம் குறையும்.
சுவரில் இருந்து குறைந்தது 2 அங்குல தூரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக நேரடி சூரிய ஒளியில் படும்படி ஃபிரிட்ஜை வைக்காதீர்கள்.
இரவு முழுவதும் ஏசியை பயன்படுத்தும்போது அதிகாலையில் அணையும்படி டைமரை செட் செய்துகொள்ளுங்கள்.