ஹை ஹீல்ஸ் அணிவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?
பாதத்தின் முன் பகுதியும், பின்பகுதியும் சமநிலையில் தரையில் பட வேண்டும்.
ஹை ஹீல்ஸ் எனும் அதிக உயரம் கொண்ட காலணிகளை அணிவதால் அந்த சமநிலை தவறுகிறது.
தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு, இடுப்பு வலி பிற்காலத்தில் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளதால், முடிந்தளவு அதை தவிர்ப்பது நல்லது.
ஹை ஹீல்ஸ் அணியும்போது, காலில் பேலன்ஸ் குறைவதால், கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதால், கணுக்கால் எழும்பு உடையும் ஆபத்துள்ளது.
இது, இடுப்பு மற்றும் முதுகெலும்பு ஆகியவற்றை முன்னோக்கி தள்ளுகிறது. தசைநார் இறுகப்படுவதால், குதிகால் வலி உண்டாகும்.
காலின் 3 மற்றும் 4வது விரலுக்கு இடையேயுள்ள நரம்பு பாதிக்கப்பட்டு, நரம்புத்தளர்ச்சி காரணமாக கால் நடுக்கம் ஏற்படக்கூடும்.
எனவே, கால்களில் வலி ஏற்பட்டால் துவக்கத்திலேயே டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.