டாப் 5 பழங்கள் என்னென்ன?
உலகளவில் உணவில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்களின் சுவை, ஊட்டச்சத்து, எளிதில் கிடைக்கும் தன்மை ஆகியவை, மக்களை ஈர்க்கின்றன.
அதில், முதலிடத்திலுள்ள வாழைப்பழத்தில், பொட்டாசியம், வைட்டமின் சி, பி6 உட்பட பல ஊட்டச்சத்துகள் உள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்தி, இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
எளிதில் கிடைப்பதாலும், குறைந்த விலையும், இனிப்பு சுவையும் இதற்கு முதலிடம் பெற்று தந்துள்ளது.
உலகளவில் அதிகம் விரும்பப்படும் பழங்களில் 2வது இடம் பிடித்துள்ளது ஆப்பிள். வைட்டமின் சி, நார்ச்சத்து நிறைந்தது. இதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன.
பட்டியலில் மூன்றாவது இடத்திலுள்ள மாம்பழத்தில், வைட்டமின் ஏ, சி, ஈ நிறைந்துள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நான்காவது இடத்திலுள்ள ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்புக்கு உதவுவதுடன், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பெரிதும் விரும்பப்படும் பழங்களில் ஐந்தாவது இடத்தில், திராட்சை உள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இது, இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.