சிறுநீரில் ரத்தக்கசிவு வர என்ன காரணம்? சிகிச்சை முறைகள் சில...

சிறுநீரக கல், சிறுநீரில் கிருமி தொற்று, சிறுநீர் பாதையில் அடைப்பு, சிறுநீர் புற்று நோய், புராஸ்டேட் சுரப்பி வீக்கம் போன்ற காரணங்களால் சிறுநீரில் ரத்தம் வரலாம்.

முதலில் சிறுநீர் பரிசோதனை, ரத்த பரிசோதனை, ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்.

சிறுநீர் கல்லாக இருந்தால் எண்டோஸ் கோபி அறுவை சிகிச்சை, மருந்து மூலம் சரி செய்யலாம்.

சிறுநீர் பாதை புற்றுநோயாக இருந்தால் நோயின் தன்மையை பொறுத்து எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை செய்யலாம்.

மேலும் நுண் துளை அறுவை சிகிச்சை, ரோபாட்டிக் அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

சிறுநீரக கல் பாதிப்பு உள்ளவர்கள் கட்டி தயிர், பாலாடை, தக்காளி, வெள்ளரிக் காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சிறுநீரக நோய்வராமல் தடுக்க தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இளநீர், பார்லி, அன்னாசிப்பழம், வாழைப்பழம், எலுமிச்சை, காரட், கொள்ளு பயறு எடுத்து கொள்ள வேண்டும்.

உப்பின் அளவை குறைத்தல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.