புகைப்பிடிக்காதவர்களுக்கும் புற்றுநோய் வர காரணம் என்ன?

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 நபர்களில் மூன்று பேர், வாழ்நாளில் புகையிலையை தொடாதவர்களாக இருக்கின்றனர்.

பொது இடங்களில், புகைப்பிடிக்கும் பகுதி பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இங்கு, நிறைய பேர், நாள்தோறும் விடும் புகையில் இருந்து வெளியேறும் நச்சுகள், கெமிக்கல், திட, திரவ பொருட்கள் அப்பகுதி காற்றில் சுற்றி கொண்டிருக்கும்.

அங்கு அடிக்கடி செல்வோர், அங்கு வேலை செய்வோருக்கு, எளிதில் அப்புகை நுரையீரலை தாக்கும்.

புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் எப்போதும் இருப்பவர்களுக்கும் இப்பாதிப்பு ஏற்படலாம்.

இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் தரவுகள்படி, கடந்த ஆண்டுகளில், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 நபர்கள் 3 பேர் வாழ்நாளில் புகையிலையை தொடாதவர்களாக இருக்கின்றனர்.