40 வயதுக்கு மேல் கருத்தரித்தால்?

40 வயதுக்குப் பின் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்புள்ளதால், தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தாக இருக்கும். எனவே, ரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

தாய்க்கு முன்பே நீரிழிவு பாதிப்பு இருந்தால், 40 வயதில் மோசமடைய வாய்ப்புள்ளது. இதனால் குழந்தையின் வளர்ச்சியிலும் பாதிப்பு உண்டாகக்கூடும்.

கருப்பையைச் சுற்றிய நீரின் அளவு அதிகரிக்கக்கூடும். அதேபோல் பிறந்த பிறகு குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

இந்த வயதில் கருச்சிதைவுக்கான வாய்ப்பு சுமார் 30 - 40 % அதிகரிக்கும் என்பது டாக்டர்களின் அட்வைஸாக உள்ளது.

கர்ப்ப காலத்தில், குழந்தை கருப்பையில் சரியாக வளர்ச்சியடையாமலோ அல்லது பிரசவம் வரை எடை முறையாக அதிகரிக்காமலோ இருக்கலாம்.

நஞ்சுக்கொடி சரியாக உருவாகாமல், அதற்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் குழந்தையைச் சுற்றியுள்ள நீர் குறையவோ, வளர்ச்சி தடைபடவோ வாய்ப்புள்ளது.

தாய் 40 வயதிற்கு மேல் கருத்தரித்தால், குழந்தைக்கு மனநலம் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் ஏற்படும் அபாயம் மூன்று மடங்கு அதிகம்.

வயது சார்ந்த பாதிப்புகளை முழுமையாக நீக்க முடியாவிட்டாலும், துவக்க நிலை பரிசோதனைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை பாதிப்பின் தன்மையை குறைக்க உதவும்.