உண்ணிக்காய்ச்சல் என்றால் என்ன... அது வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஸ்க்ரப் டைபஸ் என்பது ஓரியன்டியா சுட்சுகாமுஷி பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோய். இது பாதிக்கப்பட்ட உண்ணிகள் (mites) கடிப்பதன் மூலம் பரவுகிறது.

இந்த காய்ச்சலானது எலி, பூனை, நாய், ஆடு, மாடு, போன்ற கால்நடைகளின் உடலில் வளரும் உண்ணிகள் மற்றும் மண்ணில் இருக்கும் பொதுவான உண்ணிகள் கடிப்பதன் மூலம் பரவும்.

இந்நோய் ஏற்பட்டால் காது மடல், அக்குள் உள்ளிட்ட உடலின் மறைவான பகுதிகளில் தடிப்புகள், கொப்புளங்கள், சொரி ஏற்படும்.

இதை தொடர்ந்து காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு ஏற்படும்.

இந்த அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற வேண்டும். ஆரம்பத்திலே கண்டறிந்தால் மாத்திரைகள் மூலமாக எளிதாக குணப்படுத்த முடியும்.

கவனிக்காமல் தீவிரமடைந்தால் உடலின் பல உறுப்புகள் செயலிழந்து உயிரிழப்புக்கும் வாய்ப்பு ஏற்படும்.

பாதிக்காமல் இருக்க வீட்டினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

துவைத்த துணிகளை தினமும் அணிய வேண்டும்.

காடுகளில் வேலை செய்து வீடு திரும்பிய பின் சுடுநீரில் குளியல் சோப்பு பயன்படுத்தி குளிக்க வேண்டும்.